‘ரீபிலுக்கு’ நாங்கள் தயார்!

இவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் மறுஆய்வு தொடர்பான மனு ஒன்றை நாங்கள் தயார் செய்துள்ளோம். பொது மக்களிடையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தொகுப்பு மறுஆய்வு குறித்த ஆலோசனையின் தொடர்பாக, இந்த மனுவும் அதற்கான ஆதரவு கையொப்பங்களும் இம்மாதம் 28ஆம் தேதிக்குள் உள்துறை அமைச்சிற்கு சமர்பிக்கப்படும்.

377A பிரிவு என்பது, இரண்டு ஆண்களுக்கு இடையிலான, ஒப்புதலுக்கு உட்பட்ட ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் காலனித்துவ சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை என்றாலும், ஓரினச்சேர்க்கையாளர்களான நமது நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோரின் அடையாளத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் தவறு என்று சுட்டிக்காட்டுவதன் வழி இச்சட்டம் அவர்களை தண்டிக்கின்றது.

இம்மாதம் 6ஆம் தேதியன்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதன் அடிப்படையில், இந்திய உச்ச நீதிமன்றம் அப்பிரிவினை நீக்கியது. "பாலியல் சிறுபான்மையினரைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். சக குடிமக்கள் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும்,  தங்களுடைய அடிப்படை சுதந்திரம் பழைமையான, தற்காலத்திற்கு பொருந்தாத காலனித்துவ சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால், அவர்கள் அச்சத்தில் மறைத்து வாழ்வதோடு, இரண்டாம் வகுப்பு குடிமக்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்” என்று இந்தியாவின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பின்போது கூறினார்.

சிங்கப்பூரர்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய சட்ட விதிமுறைகளே ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் என முத்திரை குத்துகின்றது. இந்நிலையில், அத்தகைய சிங்கப்பூரர்கள் இன்னும் எத்தனை காலம் இரண்டாம் வகுப்பு குடிமக்களாக வாழவேண்டும்?

குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தும் நாடாக சிங்கப்பூர் உருவாக நாங்கள் தயாராக உள்ளோம். சிறுபான்மையினரை மதித்து, தனிப்பட்ட சுதந்திரத்தையும் தனி நபர் கௌரவத்தையும் ஊக்குவிக்கும் சிங்கப்பூருக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எவராயிருப்பினும், அவர்கள் அவர்களாகவே வாழ வழிவகுக்கும் ஒரு சிங்கப்பூருக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, சிங்கப்பூரின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் முதல் முக்கிய மறுஆய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது. குற்றவியல் தண்டனைச் சட்டத் தொகுப்பு மறுஆய்வு குழுவின் அறிக்கை குறித்து மூன்று வாரங்களுக்கு நடைபெற்ற பொது மக்களிடையிலான ஆலோசனை இம்மாதம் 30ம் தேதி ஒரு முடிவுக்கு வரும்.

குற்றவியல் தண்டனைச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இவ்வாண்டு நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக, 377A பிரிவினை மறுஆய்விலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய, அனைவரையும் சமமாய் நடத்தும் ஒரு சிங்கப்பூருக்கான கனவை நீங்களும் கொண்டிருந்தால், இந்த மனுவில் கையெழுத்திடுவதன் வழி உங்களுடைய கருத்தினை பதிவுசெய்யுங்கள். மாற்றம், இப்போது நம் கைகளில்.

ஆசிரியர்கள்: க்ளென் கோயி மற்றும் ஜோகன்னஸ் ஹடி.

முன்னணி கையொப்பங்கள்: His Excellency Professor Tommy Koh, Professor Kishore Mahbubani, Professor Walter Woon, Ho Kwon Ping, Claire Chiang, Hsieh Fu Hua, Theresa Foo & Harold Foo, Kay Kuok, Christina Ong, Professor Tan Tai Yong, Professor Tan Sook Yee, Professor Roy Chan, Professor Cherian George, Associate Professor Teo You Yenn, Dr Finian And Fiona Tan, Yeoh Lam Keong, Janice Koh & Lionel Yeo, Dr Kanwaljit Soin, Constance Singam, Corinna Lim, Braema Mathi, Tan Siok Sun, Chew Kheng Chuan, Dr Mary Ann Tsao, Deborah Barker, Sc, Harpreet Singh Nehal, Sc, Siew Kum Hong, Caesar Sengupta, Darius Cheung, Loh Lik Peng, Wee Teng Wen, Eleanor Wong, Calvin Cheng, Kok Heng Leun, E-len Fu, Veera Sekaran and Nicholas Chan

இந்த மனுவிற்கு பின்வரும் அமைப்புகளும் நிறுவனங்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கின்றனர்: Action for AIDS, AWARE, Break The Binary, Free Community Church, Indignation, Humanist Society Singapore, Inter-Uni LGBT Network, MARUAH, Oogachaga, Out in Singapore, Pink Dot SG, Pelangi Pride Centre, Project X, Prout, SAFE, Sayoni, SG Narratives, SG Rainbow, Singapore LGBT Law, The Bear Project, The Bi+ Collective SG, The Purple Alliance and The T Project.

குறிப்பு: எங்களுடைய வேண்டுகோளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக, கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலை தற்காலிகமாக அணுக இயலாது. கையொப்பப் பட்டியல் வரும் வாரங்களில் பொது மக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். உங்களுடைய பொறுமைக்கு நன்றி.

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளாகிய நாம், குற்றிவியல் தண்டனைச் சட்டத்தின் 377A பிரிவை அகற்ற நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுவதற்கு பின்வருபவையே காரணங்களாகும்:

  1. இச்சட்டம் சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது நம் மீது திணிக்கப்பட்ட சட்டம். எனவே, அது இனிமேலும் நமக்கு பொருந்தாது.

  2. இச்சட்டம் பாரபட்சத்தை ஊக்குவிப்பதோடு, LGBTQ+ சிங்கப்பூரர்களை குற்றவாளிகளாக முத்திரை குத்துவதன் வழி அவர்களை பெருமளவில் பாதிக்கின்றது.

  3. சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் பன்மைவாத சமூகமாக சிங்கப்பூர் இருப்பதை  இச்சட்டம் தடுக்கின்றது.

  4. நமது சட்டங்கள் மதச்சார்பற்றவையாகவும், மதங்களின் தாக்கத்திற்கு உட்படுத்தப்படாதவையாகவும் இருக்க வேண்டும்.

  5. இப்பிரிவுக்கு சட்ட அமலாக்கமின்மை எனும் கொள்கை தெளிவற்றது மற்றும் தன்னிச்சையானது. எனவே, இது நமது சட்ட திட்டங்களை வலுவிழக்கச் செய்கின்றது.

காலனித்துவத்தின்போது அநீதியாக திணிக்கப்பட்ட இத்தவற்றை சரிசெய்வதில் உலகின் மற்ற நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆகவே, சிங்கப்பூர் வரலாற்றின் தவறான பக்கங்களில் பதிவாகிவிடக்கூடாது என்பதே எங்களுடைய விருப்பம்.